நாட்டில் கடந்த வருடத்தில் 39,115 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் நான்கில் ஒரு பங்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளனர். அதற்கமைய, வருடத்துக்கு அண்ணளவாக 27சதவீதமான பெண்கள் மார்பாக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
அண்மைக்காலமாக நாட்டில் மார்பக புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, கடந்த வருடம் அடையாளம் காணப்பட்ட தரவுகளுக்கமைய நாளாந்தம் 103 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 2019ஆம் ஆண்டு 15ஆயிரத்து 598 பேர் இந்நோயினால் உயிரிழந்திருக்கிறார்கள். அவ்வாறெனில், நாளொன்றுக்கு புற்றுநோயினால் 42பேர் உயிரிழக்கின்றனர்.
இந்த எண்ணிக்கைகள் மிகவும் உயர்ந்த மட்டத்தை வெளிப்படுத்துவதாக சுகாதார அமைச்சின் புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.