NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டு மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் நோக்கம் – பிரதமர்

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு, மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் 2 நாள் விவாதத்தின் முதல் நாளான நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில், மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்றம் கூடிய நாளிலிருந்து எதிர்க்கட்சியின் பொறுப்புக்கள் என்னவென்றும், அவர்களின் திட்டம் என்ன என்பதை புரிந்துகொள்ள தான் முயற்சித்தாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்க்கட்சி எந்தவொரு காரணமும் இன்றி கூச்சலிடுவதாகவும் தெரிவித்த அவர், நாட்டிற்கு தேவையான பரிணாமத்திற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.


எனினும், எதிர்க்கட்சியில் உள்ள சிலர் இந்த வேலைத்திட்டத்தை விமர்சித்துக்கொண்டு நல்லவற்றிற்கு முன்னிற்பதாக கூறுகின்றமை பாரதூரமானது எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

Share:

Related Articles