சிரிய ஜனாதிபதி பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சிரிய எதிர்க்கட்சி போர் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சிரிய தலைநகருக்குள் நுழைய தொடங்கியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை டமாஸ்கஸ்-இல் இருந்து பஷார் ஆசாத் விமானத்தில் புறப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பின் ரமி அப்துர் ரஹ்மான் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து அப்துர் ரஹ்மானின் கருத்துக்கள் வெளியாகி உள்ளன. தலைநகரில் வசிப்பவர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சத்தங்களை கேட்டதாக தெரிவித்தனர்.