கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 33 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இன்று (23) அதிகாலை ஒரு மணிக்கு கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த முச்சக்கரவண்டி வார்ட் பிளேஸில் உள்ள தேசிய பல் வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் போது மித்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரின் பெயரில் அந்த முச்சக்கரவண்டி பதிவு செய்யப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
வாடகை வண்டி சாரதியான தனது 33 வயதுடைய மைத்துனருக்கு வாகனத்தை வழங்கியதாக முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.