NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிலப் பிரச்சினையில் தாயை எரித்துக்கொன்ற மகன்!

இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையில் நடந்த நிலப் பிரச்சினையில் மகன் தாயை பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு இந்த நிலப்பிரச்சினை செல்ல, தாய்க்கும் மகனுக்கும் இடையிலான தகராறு தொடர்பில் பொலிஸில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இதனால் இதற்கு தீர்வு காண இரு தரப்பினரையும் பொலிஸார் வரவழைத்துள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில்தான் தாய் மீது மகன் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளார். உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் பொலிஸார் இறங்கினர். ஆனால், 40 சதவீத தீக்காயம் அடைந்த அப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

இச் சம்பவத் தொர்பில் வீடியோ காட்சிகளை பொலிஸார் வெளியிட்டதோடு, இறந்த பெண்ணின் மகனை கைது செய்துள்ளனர்.

Share:

Related Articles