NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிலவை நோக்கி செல்லும் அமெரிக்க ஆய்வுக்களம்!

நிலவில் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆய்வுக் கலத்தை சுமாா் 50 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக அமெரிக்கா அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனமான அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெரக்ரின் லூனாா் லேண்டா் 1, அந்நாட்டின் ஃபுளோரிடா மாகாணம், கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

யூனைட்டட் லாஞ்ச் அலையன்ஸ் நிறுவனத்தின் வல்கன் ரொக்கெட் மூலம் இவ் ஆய்வுக் கலம் செலுத்தப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 23ஆம்  திகதி அந்த ஆய்வுக் கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அது வெற்றிகரமாகத் தரையிறங்கினால் நிலவில் ஆய்வுக் கலத்தைத் தரையிறக்கிய முதல் தனியாா் நிறுவனம் என்ற பெருமையை அஸ்ட்ரோபாடிக் டெக்னாலஜிஸ் பெறும்.

இதற்கு முன்னா் கடந்த 1972ஆம் ஆண்டில் நிலவுக்கு அமெரிக்கா தரையிறங்கும் ஆய்வுக் கலத்தை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles