வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடலில் நீராடச் சென்ற தென்கொரிய நாட்டு பெண் ஒருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் அலையில் அடித்துச் செல்லப்பட்ட போது, கரையோரப் பாதுகாப்புப் படையினரும், உயிர்காப்புப் படையினரும் இணைந்து அவரை கரைக்கு அழைத்து வந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்