நுகேகொடை – ஸ்டேன்லி திலகரட்ன மாவத்தை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன், மற்றுமொரு கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
எனினும், காயமடைந்த இரு சிறுவர்களுக்கும் பெரிய பாதிப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.