NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நெஷனல் சுப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டியை பார்வையிட இலவச அனுமதி..!

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ஐந்து அணிகள் பங்கேற்கும் அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட நெஷனல் சுப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நாளை தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கொழும்பு மற்றும் ஜப்னா அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது.

இரவு பகல் ஆட்டமாக பிற்பகல் 2:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆட்டத்தை பார்வையிட ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ரசிகர்கள் பகல் 1:30 மணி முதல் போட்டிகளை நேரடியாக பார்வையிட மைதானத்திற்கு அனுமதிக்கப்படும்.

Share:

Related Articles