NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜர் நாட்டு ஜனாதிபதி மீது தேசத்துரோக வழக்கு : மரண தண்டனை வழங்க திட்டம் !

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், ஜனாதிபதி முகமது பாசுமுக்கு எதிராக திரும்பிய இராணுவம் அவரை சிறைபிடித்தது.
பின்னர் அவரை பதவி நீக்கம் செய்து இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

இதற்கு ஐ.நா., ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு போன்றவை எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி முகமது பாசும் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் தேசிய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர போவதாக நைஜர் இராணுவத்தினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்காக அவருக்கு எதிரான ஆதாரங்களை அவர்கள் திரட்டி வருகின்றனர்.
இந்த வழக்குகளில் முகமது பாசும் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் மரண தண்டனை வரை வழங்க வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles