NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜீரியாவில் பெற்றோல் பாரவூர்தி வெடித்ததில் 8 பேர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் நேற்று (24) எண்ணெய் தாங்கி பாரவூர்தி ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து ஒண்டோவில் உள்ள ஃபெடரல் வீதி பாதுகாப்புப் படையின் தலைவர் எசேக்கியேல் சோனால்லா கருத்து தெரிவிக்கையில், நேற்று முன்தினம் (23) சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பெற்றோல் தாங்கி வீதியை விட்டு விலகி ஒன்டோவின் ஓடிக்போ மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது.

இதைதொடர்ந்து, தாங்கியில்; இருந்து எரிபொருளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இது வெடித்து சிதறியுள்ளது. பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் அலைப்பேசியை உடன் வைத்திருந்தமையால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த விபத்தில், சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் காயமின்றி தப்பியுள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சகலரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles