NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைக்கு பின்னர் வழமையான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம்!

பங்களாதேஷில் 30 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக ஜூன் மாதம் முதல் ஆரம்பமான இந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.

நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்ததால் கடந்த மாதம் 17 ஆம் திகதி அங்குள்ள பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்து போராட்டத்தை தீவிரப்படுத்தியதுடன் மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் கடந்த 5 ஆம் திகதி ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன் பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது.

இதையடுத்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதுடன் பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க இடைக்கால அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி 18 ஆம் திகதி முதல் கல்வி நிறுவனங்களை திறக்குமாறு கடந்த 15 ஆம் திகதி கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளதுடன் அதற்கமைய ஒரு மாதத்துக்குப்பிறகு நாடு முழுவதும் நேற்று பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Share:

Related Articles