NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்களுக்கான விசேட அறிவித்தல்!

பாடசாலைகளில் பணியாற்றிவரும் பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக தகுதி பெற விரும்பும், அரச பாடசாலைகளின் பட்டதாரிகள் அல்லாத சகல ஆசிரியர்களும் மே மாதம் நடைபெறும் அரச ஆசிரியர் கல்லூரி இறுதித் தேர்வு – 2025 பரீட்சையை எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பரீட்சை எழுத விரும்பும் அரச பாடசாலை ஆசிரியர்கள் ஜனவரி 9 முதல் 24 வரை இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://doenets.lk அல்லது http://onlineexams.govt.lk/eic இல் பெறலாம்.

இதன்படி, விண்ணப்பங்களை இந்த இணையத்தளங்கள் வழியாக பரீட்சைத் திணைக்களத்துக்கு உரிய திகதிக்கு அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles