சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளிவரக்காத்திருக்கும் சிவகார்திகேயனின் 25 வது திரைப்படம்தான் ‘‘பராசக்தி ‘‘. இத் திரைப்படத்தில் அதர்வா, ரவி மோகன் உள்ளிட்டோர் நடித்துவரும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படத்தின் டைடில் டீசரும் வைரலாகி இருக்கிறது.
இந்த நிலையில் பராசக்தி என்ற டைட்டிலை கடந்த ஜூலை மாதம் வாங்கிவிட்டேன் என ஆதாரம் வெளியிட்டு இருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி.இது குறித்து அவர் வெளியிட்ட அனுமதி கடிதத்தில் ”பராசக்தி ” எனும் டைட்டில் தெலுங்கு டைட்டில் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும் சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படத்திற்கு வைக்கப்பட்டிருக்கும்”Paraashakthi ” என்ற வார்த்தையில் AA இருக்கிறது.அதனால் இரண்டு டைட்டிலும் வெவ்வேறு spelling, தேவையில்லாமல் விஜய் ஆன்டனி தற்போது சர்ச்சை ஏற்படுத்துகிறார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.