NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பறிபோகும் ஹர்திக் பாண்டியாவின் பதவி?

ரோகித் சர்மாவை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஏற்க மறுத்து, மும்பை இந்தியன்ஸ் விளையாடும் மைதானங்களில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.இந்நிலையில் தோல்விகளாலும், ரசிகர்களின் எதிர்ப்பாலும் அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தை சந்தித்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

இது குறித்து மனோஜ் திவாரி கூறியதாவது:-ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தில் இருக்கிறார் என்பது சில விடயங்கள் மூலம் தெரிகிறது. அவர் ரசிகர்களின் எதிர்ப்பால் அழுத்தத்தை உணர்கிறார். நான் பெரிய விடயம் ஒன்றை சொல்லப் போகிறேன். இந்த ஆறு நாள் இடைவெளியில் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து தலைவர் பதவியை பறித்து ரோகித் சர்மாவை அணித்தலைவராக வாய்ப்புள்ளது.இந்த மாற்றம் நடக்க வாய்ப்புள்ளது.

இந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் குறித்து எனக்கு தெரிந்த வரை அவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார்கள். அவர்கள் தான் ரோகித் சர்மா அணித்தலைவர் பதவியை பறித்து இந்த சிக்கலை துவங்கி வைத்தார்கள்.உங்களுக்கு ஐந்து கிண்ணம் வென்று கொடுத்த அணித்தலைவரை மாற்றினீர்கள். தற்போது புதிய அணித்தலைவர் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றுத் தரவில்லை. நிறைய தவறுகள் நடக்கின்றன.இவ்வாறு திவாரி கூறினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles