பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் மேலும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இலங்கை சுங்கம் எதிர்பார்த்த வருமான இலக்கை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைத்தொழில், வீட்டு பாவனை மின்சார உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடைகளைத் தளர்த்துமாறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இது தொடர்பான கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றும், மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர்; தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான இலக்கில் 270 பில்லியன் ரூபாய் சுங்க வருமானமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய வருமானம் எதிர்பார்த்த வருமானத்தில் 12 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது எனக் கூறிய அமைச்சர், தற்போது பல பொருட்களுக்கு இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.