பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே மின்னலினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.