NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல்கலை.மாணவர்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள் குறித்து அவதானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அநுராதபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் உயர் தொழிநுட்ப டிப்ளோமா கற்கை நெறிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு மனிதாபிமானமற்ற துன்புறுத்தல்களை பொறுக்க முடியாமல் 8 மாணவர்கள் பாடப்பிரிவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட ஆண் மாணவர்கள் புதிய மாணவர்களை குளியலறைக்கு அழைத்துச் சென்று அவர்களின் ஆடைகள் அனைத்தையும் வலுக்கட்டாயமாக கழற்றி மாணவர்களை பார்க்க வைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சில நாட்களில் இரவு நேரங்களில் புதிதாக மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு சென்று அவர்களின் தாய்மார்களை நினைவு கூர்ந்து கடுமையான வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே சில புதிய மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளமை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles