NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை.!!

டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பஸ் கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை தனியார் பஸ்உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

எரிபொருள் விலை மட்டும் பஸ் கட்டணங்களைப் பாதிக்கும் ஒரே காரணியல்ல எனவும், ஏனைய அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார். 

பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், டீசல் விலையை 25 ரூபா முதல் 30 ரூபா வரையில் குறைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

Share:

Related Articles