இன்று முதல் பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தை கருத்தில் கொண்டு பஸ் கட்டணத்தை திருத்துவதற்கு போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் இன்று (01) கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்பட வேண்டுமெனவும், அதன்படி நாளை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் சஷி வெல்கம தெரிவித்தார்.