NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் – முச்சக்கரவண்டி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

மிஹிந்தலை பிரதேசத்தில் இன்று (09) தனியார் பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் அநுராதபுரம் – கலத்தேவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தனியார் பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 4 பயணிகள் காயமடைந்த நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles