NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தான் – இலங்கை அணிக்கு இடையிலான போட்டிக்குத் தடை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தமையால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சிற்காக இலங்கை அணி 166 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது.

Share:

Related Articles