NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் வெளிநாடு செல்ல தடை !

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் இம்ரான்கான், அவரது மனைவி பஸ்ரா பீபி மற்றும் பி.டி.ஐ. கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட 80 பேர் வெளிநாடு செல்ல தடை விதித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இது தொடர்பாக கருத்துரைத்த இம்ரான் கான், ‘வெளியேறுதல் தடை பட்டியலில் எனது பெயரை இணைத்ததற்காக பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் வெளிநாடு செல்வதற்கான திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. ஏனெனில் வெளிநாடுகளில் எனக்கு சொத்துகளோ, வர்த்தகமோ இல்லை. ஒரு வங்கி கணக்கு கூட இல்லை’ என தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரீப் உள்பட பாகிஸ்தானை ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதையே அவர் மறைமுகமாக சாடியிருப்பதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles