NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாண்டியிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க தடை!

அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டியிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வு இன்று (14) காலை 08.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸாரின் எச்சரிக்கையினை அடுத்து நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பாண்டியிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுத்திருந்தது.

எனினும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கல்முனை நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து நிகழ்வை தடுத்து நிறுத்தினர்.

அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் என்பவருக்கு தடை உத்தரவு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி உள்ளிட்டோர் பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவ்விடத்தில் இருந்து அனுப்பியுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை சம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles