NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாபர் அஸாமின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!

சர்வதேச T20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கெப்டன் பாபர் அசாமின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சமன் செய்துள்ளார்.

T20 உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தனது சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கெப்டன் ரோஹித் சர்மா 92 ரன்கள் எடுத்து 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டபோதிலும், சர்வதேச T20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா பாகிஸ்தான் அணியின் கெப்டன் பாபர் அஸாமின் சாதனையை சமன் செய்துள்ளார்.

சர்வதேச T 20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கெப்டனாக வலம் வந்த பாபர் அசாமின் சாதனையை ரோஹித் ஷர்மா சமன் செய்துள்ளார். அணியின் கேப்டனாக இருவரும் தங்களது அணிகளை 48 போட்டிகளில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

Share:

Related Articles