கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸின் மறைவையொட்டி இந்தியாவில் 3 நாட்களுக்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸின் நேற்றைய தினம் காலமானார். அவரின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் தன் கல்லறையை அமைக்க பாப்பரசர் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும் ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார் பசிலிகாவில் தனது கல்லறையை அமைக்க பாப்பரசர் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.
ரோமுக்கு செல்லும்போதெல்லாம் சான்டா மரியா மேகியார் பசிலிகாவுக்கு செல்வதை பாப்பரசர் வழக்கமாக வைத்திருந்தார்.
இதன்மூலம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வத்திகானுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் பாப்பரசர் இவர் ஆவார்.
இந்நிலையில்இ பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை ஒட்டிஇ 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் இந்தியா முழுவதும் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.