NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் கொழும்பு மாவட்டத்தில் குறித்த செயற்பாடுகள் இன்று இடம்பெறமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வாக்காளர் அட்டையுடன் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ள வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் இன்னும் தபால் திணைக்களத்திற்குக் கிடைக்கப்பெறவில்லை எனப் பிரதி தபால் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி, வாக்காளர் அட்டை விநியோகத்துக்கான விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 7ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிடின், அருகிலுள்ள அஞ்சல் நிலையத்துக்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles