NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் 1642 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன..!

பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் இதுவரை 1642 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 1592 முறைப்பாடுகளும், வன்முறைகள் தொடர்பில் 15 முறைப்பாடுகளும், ஏனைய தேர்தல் குற்றங்களின் அடிப்படையில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதேவேளை, கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் 1365 முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதுடன், 277 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles