NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிப்ரவரி மாதம் காணாமல் போன 14 வயதுடைய சிறுமி காதலனுடன் கண்டுபிடிப்பு !

14 வயதுடைய சிறுமி ஒருவருடன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்த 18 வயதுடைய இளைஞனும் அவருக்கு உதவிய மேலும் மூவரையும் அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அலவத்துகொடை பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண் ஒருவர், கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இரவு முதல் 14 வயதுடைய தனது பேத்தி காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான பொலிஸ் விசாரணையில் குறித்த சிறுமி தனது காதலனுடன் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து நேற்று பொலிஸ் நிலையத்திற்கு தனது பாட்டியுடன் வந்த குறித்த சிறுமி,

தனது 18 வயதுடைய காதலனுடன் சென்று மாத்தளை பிரதேசத்தில் இரு மாதங்களாக வீட்டில் தங்கி இருந்ததாக கூறியுள்ளார்.

இதற்கமைய, 14 வயது சிறுமியுடன் தங்கியிருந்த குற்றத்திற்காக 18 வயதுடைய குறித்த காதலனையும்,

அவருக்கு உதவிய மாத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரு வீடுகளுடைய உரிமையாளர்களும், மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று கண்டி நீதவான் முன் முன்நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles