NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல மல்யுத்த வீரர் John Klinger மரணம்!

பிரபல ஐரோப்பிய மல்யுத்த நட்சத்திரமான பேட் போன்ஸ் என அழைக்கப்படும் ஜோன் கிளிங்கர் (John Klinger) தனது 40வது வயதில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் மல்யுத்த ஊக்குவிப்பு Westside Xtreme Wrestling இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், அவர் இறந்த நேரம் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக மல்யுத்தப் போட்டிகளில் பங்குபற்றிய அவர், 2007 ஆண்டு wXw இன் Strong Style பட்டத்தை வென்றதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

அத்துடன், wXw இன் சிறந்த பட்டமான Unified World Wrestling Championshipஐ மூன்று முறை வெற்றிகொண்டுள்ளார்.

அவர் wXw இல் அனைத்து முக்கிய பட்டங்களையும் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘wXw வளையத்தில் சுமார் 450 போட்டிகளில் அவர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

Share:

Related Articles