16 ஆவது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகின்றது.
இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ரஷ்யா சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாநாட்டிற்கிடையே பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகள் தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில்இ ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு.
இது கடந்த 2009 ஆம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும்.
இதில் 2010 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா இணைந்துக் கொண்டது.
கடந்த ஜனவரி எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
இதேவேளை காயம் காரணமாக பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.