பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகின்ற நிலையில் வாக்களிக்கும் நடவடிக்கைகள் உள்ளூர் நேரப்படி காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நேரம், இரவு 10.00 மணியுடன் முடிவு பெறும்.இதன் பின்னர், தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் வாக்காளர்களிடம், யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளின் முடிவும் வெளியாகும்.
இந்த கருத்துக்கணிப்புகள் பொதுவாகவே, சரியாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. 2019இல், போரிஸ் ஜான்சன் பிரதமராவார் என மக்கள் கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமைந்திருந்தன.
இரவு 10.00 மணி வாக்களிப்பு முடியும் அதேவேளை, 11.00 மணியளவில், வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களை சென்றடையும். இரவு 11.30 முதல் 12.15 மணி வரை யார் முதலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பது என்னும் போட்டி ஆரம்பமாகும்.
2017இலும் இந்த தொகுதியில்தான் முதன்முதலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின. அதிகாலை 12.30 முதல் 3.00 மணி வரை சுமார் 80 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும்.
3.00 மணிக்கு மேல், எந்தக் கட்சி எத்தனை இடங்களைக் கைப்பற்றியது, எத்தனை இடங்களை இழந்தது என்ற விவரங்களும் வெளியாகும்.
இதேவேளை, தொழிற் கட்சி பெரும்பாலான இருக்கைகளைக் கைப்பற்றும் என்றும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரிய இழப்பு ஏற்படும் என்றும் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.