NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிறப்பு மற்றும் இறப்பு வீதம் தொடர்பான அறிக்கை.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்ஷிகா கணேபொல தெரிவித்த அறிக்கையின் படி, 2020ம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதோடு இறப்பு வீதம் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்பு எண்ணிக்கை தற்போது 280,000 ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் வருடாந்த இறப்பு எண்ணிக்கை 140,000 இலிருந்து 180,000 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலைமை சனத்தொகை பெருக்கத்தை பாதிக்கும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share:

Related Articles