NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரதத்தில் மோதி நபர் பலி!

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் புகையிரத கடவை காவலாளி ஒருவர், புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் (20) இடம்பெற்ற இந்த விபத்தில், திருகோணமலை ஜெயபுர பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம், பத்தினி புறத்தில் உள்ள கடவையை அண்மித்தபோது நித்திரை கொண்டிருந்த காவலாளி திடீரென கண்விழித்து, வேகமாகச் சென்று கடவையை மூட முயற்சித்துள்ளார்.இதன்போது, புகையிரத்தில் மோதி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles