வாகன ஓட்டுனரின் பெயரைக் கேட்டதும் வாகனத்தை இரத்துச் செய்த சம்பவம் நகைச்சுவையுடன் அதிகம் பரவி வருகின்றது.
இன்றைய காலகட்டத்தில் பயணம் செய்யவேண்டுமென்றால் அதற்கான போக்குவரத்துச் சேவை செயலிகளைப் பயன்படுத்தி வசதியாகவும் பாதுகாப்பாகவும் நியாயமான விலையிலும் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடிகிறது.
அதேபோல், கர்நாடாகவைச் சேர்ந்த நபரொருவர் செயலியைப் பயன்படுத்தி வாகனத்தை முன்பதிவு செய்துவிட்டு வீட்டில் காத்துக்கொண்டிருந்தபோது அவரின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியொன்று வந்துள்ளது.
அதில் வாகன ஓட்டுனரின் பெயரும், அவரது வாகனத்தின் எண்ணும் இருந்ததைப் பார்த்த பயணி அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
குறித்த வாகன ஓட்டுனரின் பெயர் யமராஜா. ஆகவே, பயணியின் தொலைபேசிக்கு “யமராஜா உங்களது இருப்பிடத்திற்கு வந்திருக்கிறார். உங்கள் இருப்பிடத்தில் காத்திருக்கிறார்”- என்று செய்தி வந்துள்ளது.
இதனைப்பார்த்த பயணி உடனே முன்பதிவு செய்த வாகனத்தை இரத்துச் செய்திருக்கிறார்.