ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்டக்காரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று (22) வெளியிட்டது.
அந்த வகையில் பட்டியலில் முதல் 4 இடத்தில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
முதல் இடத்தில் சுப்மன் கில்லும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமும், மூன்றாவது இடத்தில் விராட் கோலி மற்றும் நான்காவது இடத்தில் ரோகித் ஷர்மா ஆகியோர் உள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் டொப் 10இல் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சிராஜ் 3ஆவது இடத்திலும் 4ஆவது இடத்தில் பும்ராவும் குல்தீப் யாதவ் 6ஆவது இடத்திலும் 10ஆவது இடத்தில் முகமது ஷமியும் உள்ளனர். 741 புள்ளிகளுடன் கேசவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார்.
அணிகள் பட்டியலில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் உள்ளது.