முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவருக்கு குளவி கொட்டியதில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வள்ளிபுனம் கல்லூரியில் கல்வி கற்கும் தனது 19 வயதுடைய மகள் மற்றும் 14 வயதுடைய மகன் ஆகியோரை பாடசாலைக்கு ஏற்றிக்கொண்டு சென்ற போது பாடசாலைக்கு அருகில் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான மூவரும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.