ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்காமல் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விழாக்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்படும் என புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒழுக்கக்கேடான கூறுகளை உள்ளடக்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல நடத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
பாலியல் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தும் அம்சங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.