NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண்களைக் கண்டால் பயம்: 55 வருடங்களாக ஒழிந்து வாழும் ஆண்!

எல்லாருக்குமே ஏதோ ஒரு விடயத்தின் மேல் பயம் இருக்கும். ஆனால், ஒரு ஆணுக்கு பெண்களைப் பார்த்தால் பயம் என்றால் நம்புவீர்களா? 

இந்தப் பயத்துக்குப் பெயர்தான் கைனோஃபோபியா.

இந்த கைனோஃபோபியா பயத்தால் பாதிக்கப்பட்ட 71 வயதான ஆண் ஒருவர் தான் பெண்களைப் பார்க்காமல் இருப்பதற்காக மரவேலியால் சூழப்பட்ட ஒரு சிறிய வீட்டுக்குள் சுமார் 55 வருடங்களாக தனிமையில் வசித்து வருகிறார். 

Callitxe Nzamwita என்பவரே இந்த பயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். 16 வயதாக இருக்கும்போது இவருக்கு பெண்கள் மீதான பயம் அதிகமாகியுள்ளது. அதனால் இவர் 1968ஆம் ஆண்டிலிருந்தே தனக்கென ஒரு வீட்டைக் கட்டத் தொடங்கியுள்ளார்.

வெளியிலிருந்து பார்க்கும்போது இவர் கட்டிய வீடு பாழடைந்த வீடாக தோன்றினாலும், ஒரு நபர் வசிக்குமளவுக்கு அமைந்திருக்கிறது.

இவர் தனது வீட்டுக்கு அருகில் ஒரு பெண்ணைக் கண்டால், அவர்களிடமிருந்து மறைந்துகொள்ள விரைவாக வீட்டுக்குள் ஓடி விடுவாராம்.

இவர் பெண்களை வீட்டுக்குள் சேர்க்கமாட்டார் என்பதால் அக்கம் பக்கத்திலுள்ள பெண்கள், இவருக்குத் தேவையான உணவு, மளிகைப் பொருட்களை வீட்டு முற்றத்தில் வீசி விட்டுச் செல்வார்களாம். அந்த பெண்கள் சென்ற பின்னர் இவர் அந்த பொருட்களை எடுத்துக் கொள்வாராம்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles