NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெரும்பான்மையான எம்.பிக்கள் இன்னும் ஆயுதங்களை திருப்பிக் கொடுக்கவில்லை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

1980ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை ஆயுதங்கள் வழங்கப்பட்ட பெரும்பான்மையான எம்.பிக்கள் இன்னும் அந்த ஆயுதங்களை திருப்பிக் கொடுக்கவில்லை என பாராளுமன்றில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு ஆயுதங்களைப் பெற்ற 150 எம்.பி.க்களில் 100க்கும் மேற்பட்டோர் இன்று வரை ஆயுதங்களைத் திருப்பிக் கொடுக்கத் தவறியுள்ளதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கேட்ட வாய்மூல கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ஆயுதங்களை மீள வழங்காத எம்.பி.க்கள் சிலர் தற்போது சுகயீனமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

1989ஆம் ஆண்டு முதல் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தானியங்கி துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளதா என உறுப்பினர் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், இவ்வாறான ஆயுதங்கள் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

Share:

Related Articles