ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பேய் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 3 ஐரோப்பியர்கள் உட்பட 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினரின் நாடு தழுவிய அடக்குமுறைக்குப் பிறகு சோதனை ஒன்று நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சோதனை நடத்தப்பட்ட குறிப்பிட்ட இடமொன்றில் அங்கு, 146 ஆண்களும், 115 பெண்களும் கைது செய்யப்பட்டனர், அவர்கள் ஈரானின் இஸ்லாமிய சட்டப்படி தடைசெய்யப்பட்ட மது மற்றும் போதைப் பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், அவர்கள் வசம் முகமூடிகள், மண்டை ஓடுகள் மற்றும் டி-சர்ட்கள் இருந்தமை கண்டிபிடிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், பேய் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவற்றுடன் தொடர்புடைய ஐரோப்பியர்களின் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.