NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கை அணிக்கு 2 பதக்கங்கள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மேற்கிந்தியத் தீவுகளின் போர்ட் ஒவ் ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் ட்ரின்பாகோ 2023 பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கை அணி 2 பதக்கங்களை வென்றுள்ளது.

அதன்படி, ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான உயரம் பாய்தலில் நிலுபுல பெஹசர வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

ட்ரின்பாபோ, ஹேஸ்லி க்ரோஃபோர்ட் விளையாட்டரங்கில் இன்று (10) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்ட இறுதிப் போட்டியில் இலங்கையின் அயோமல் அகலங்க பலத்த போட்டிக்கு மத்தியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

போட்டியை நிறைவு செய்ய அவர் 51.61 செக்கன்களை எடுத்துக் கொண்டார். குறித்த போட்டி நிகழ்ச்சியில் அவரது 2ஆவது அதிசிறந்த நேரப் பெறுதியாகவும் பதிவாகியது.

Share:

Related Articles