NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டிக்கு வவுனியாவில் இருந்து மாணவி தெரிவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியாவில் இருந்து மாணவி ஒருவர் தெரிவாகியுள்ளார்.

2023ஆம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக வவுனியாவிலிருந்து 40 கிலோ எடை பிரிவில் 16 வயதுடைய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி கோசியா திருமேனன் தெரிவாகியுள்ளார்.

குறித்த மாணவி நேற்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை டெல்லியில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Related Articles