NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் C.T ஸ்கேன் சேவை முற்றாக பாதிப்பு!

பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் C.T ஸ்கேன் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அங்குள்ள ஒரேயொரு C.T ஸ்கேன் இயந்திரமும் பழுதடைந்ததன் காரணமாக குறித்த சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வருடாந்த சேவை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமையால், குறித்த இயந்திரத்தை சீர்செய்வதில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை சிறுவர்களுக்கான சிறப்பு வைத்தியசாலையாக காணப்படுகின்றது.

C.T ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், தற்போது, சிகிச்சையளிப்பதற்கு பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட C.T ஸ்கேனை இன்று சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் பீ. விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

C.T ஸ்கேன் இயந்திரத்தில் செயலிழந்த ஒரு பகுதியை கண்டி வைத்தியசாலையில் இருந்து கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles