2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 102% அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கமைய 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.உணவு வகைகளின் விலை சுமார் 128% அதிகரித்துள்ளதாகவும், உணவு அல்லாத வகைகளின் விலைகள் சுமார் 85% அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைக்கமைய, ஜூலை மாதத்தில் பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.
இது பொருட்களின் விலையில் வீழ்ச்சி அல்ல, மாறாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு விகிதத்தில் ஏற்பட்ட சரிவே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, ஜூலை மாதத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது. மற்றும் உணவு வகை பணவீக்கம் சுமார் 2.5% குறைந்தாலும், மக்களுக்கு இது முக்கியமற்ற ஒரு மதிப்பாகும்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் உடன் ஒப்பிடும்போது, பணவீக்கம் பெப்ரவரியில் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. 49 சதவீத அதிகரிப்பின் பின்னர் 2.5 சதவீதம் குறைந்தால் மக்களால் எந்த வகையிலும் அதன் நன்மையை உணர முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.