NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொருளாதார நெருக்கடி காரணமாக வீழ்ச்சிக்கண்டு வரும் ஆடைத் தொழில் துறை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் மொத்த உற்பத்தியில் 25 சதவீதத்திற்கும் குறைவான உற்பத்தியே இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிற்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஒன்றிணைந்த ஆடை உற்பத்தியாளர் ஒன்றியம் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த ஆடைத் துறையில் உள்ள பல தொழிற்சாலைகள் தமது தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிநாடுகளில் தமது கைத்தொழில்களை ஸ்தாபித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையிலான குறித்த குழு முன்னிலையில் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share:

Related Articles