NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால் இலங்கை போன்று சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் !

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாகிஸ்தானில் சில வருடங்களாகவே பொருளாதார சிக்கல் நிலவி வரும் நிலையில், சமீப காலமாக அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

பயங்கரவாதம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது.

நிலைமை மோசமானதை தொடர்ந்து அந்நாடு பல நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்க பல நிபந்தனைகளை விதித்தது. அதற்கு பாகிஸ்தான் இணங்கிய பிறகு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி (இந்திய மதிப்பின்படி) கடனாக வழங்கியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் எதிர்கால விரிவான பொருளாதார நிலையை ஆராய்ந்த நிதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், மீண்டும் ஒருமுறை இது போன்ற ஒரு பெரும் தொகை பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. பாகிஸ்தானின் பொருளாதாரம், சிக்கலான மற்றும் பன்முகம் கொண்ட சவால்களை சந்தித்து ஒரு அபாயகரமான நிலையில் இருக்கிறது.

இந்த சவால்களை எதிர்கொள்ள அந்நாட்டிற்கு அந்நிய வழிகளில் பல உதவிகள் தேவைப்படும். இது மட்டுமல்லாமல் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியும் மீண்டுமொரு முறை தேவைப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார மற்றும் எரிபொருள் ஆகிய இரு துறைகளிலும் அந்நாடு பெருமளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் பெறுவதற்காக செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நுகர்வோருக்கு கட்டணத்தை உயர்த்த சம்மதித்துள்ளது.

இதற்கு உள்நாட்டிலேயே பல எதிர்ப்புகளை அந்நாடு சந்தித்து வருகிறது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles