NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது.

1 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.பொலிஸ் மோசடி விசாரணைப் பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான சார்ஜன்ட் குருநாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles