பொலிஸ் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட, 494 கிலோ 48 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன.
புத்தளம், பாலவி பகுதியில் உள்ள INSEE சிமென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான எரியூட்டியில் இவைகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகருமான புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.
அதற்கமைய, இன்று (28) காலை குறித்த போதைப்பொருட்கள் புத்தளம், பாலவி பகுதிக்கு அதியுயர் பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.