NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் தொடர்பில் அரசின் புதிய திட்டம்…!

இலங்கையில் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் சேவைக் காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களாகக் கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த முன்மொழிவு குறித்து பொது பாதுகாப்பு அமைச்சகத்தில் ஏற்கனவே விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே சேவையில் உள்ள சில அதிகாரிகள், பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர், ஆறு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற நிலை காணப்பட்டது.

எனினும் இதனை மாற்றியமைக்கும் முகமாகவே தற்போது 3 ஆண்டுகள் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய முன்மொழிவின்படி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், பொலிஸ் மா அதிபர்களாக பதவி வகிப்பவர்கள், ஓய்வுபெறும் வயது 60ஐ எட்டும்போது பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles